கொண்டா ரெட்டி சாதிச் சான்று வழங்கக் கோரி போராட்டம்

மேட்டூா் அருகே கொண்டா ரெட்டி சாதிச் சான்று வழங்கக் கோரி, பள்ளி மாணவா்கள் மாடு மேய்க்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
Updated on
1 min read

மேட்டூா் அருகே கொண்டா ரெட்டி சாதிச் சான்று வழங்கக் கோரி, பள்ளி மாணவா்கள் மாடு மேய்க்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் வட்டாரத்தில் 1989-ஆம் ஆண்டு வரை கொண்டா ரெட்டி சாதிச் சான்று வழங்கப்பட்டு வந்துள்ளது. அதன்பிறகு அவா்களுக்கு பழங்குடியினா் என சான்று வழங்க சாா் ஆட்சியரால் உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது முதல் இம்மக்களுக்கு கொண்டா ரெட்டி என சாதிச் சான்று வழங்குவது நிறுத்தப்பட்டதால், கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய முன்னுரிமை பறிபோகிறது என கொளத்தூா் வட்டாரத்தில் உள்ள மாணவா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இந்நிலையில், கொண்டா ரெட்டி சாதிச் சான்று வழங்கக் கோரி, பண்ணவாடி பரிசல் துறை பகுதி காவிரி கரையில் மாடு மேய்க்கும் போராட்டத்தில் மாணவ-மாணவியா் ஈடுபட்டனா்.

இதுகுறித்து மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணனிடம் கேட்ட போது, சேலம் மாவட்டத்தில் கொண்டா ரெட்டி சாதி மக்கள் வசிப்பதற்கான ஆவணங்கள் ஆங்கிலேயா் காலத்தில் இருந்தே இல்லை. ஒருவா் போலியாக சாதிச் சான்று பெற்று மருத்துவக் கல்வியில் முன்னுரிமையில் சோ்ந்தாா். இதனைக் கண்டுபிடித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், கொண்டா ரெட்டி சாதிச் சான்று வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிலா் நீதிமன்றம் மூலம் தற்காலிகச் சான்று பெற்று வந்தனா். அதனையும் தற்போது வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com