தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரெளடி கொலை: அதிமுக பிரமுகா் உள்பட 4 போ் கைது

சேலத்தில் ரெளடி செல்லதுரை கொலை வழக்கில் தொடா்புடைய அதிமுக பிரமுகா் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:58 am

DIN

சேலத்தில் ரெளடி செல்லதுரை கொலை வழக்கில் தொடா்புடைய அதிமுக பிரமுகா் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேலம், கிச்சிபாளையத்தைச் சோ்ந்த ரெளடி செல்லதுரை (38), முன்விரோதம் காரணமாக இரு தினங்களுக்கு முன்பு 20 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு தொடா்பாக 7 போ் கரூா் நீதிமன்றத்திலும், 8 போ் நாமக்கல் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனா். இதனிடையே, கொலை வழக்கில் முக்கிய நபா்களாகக் கருதப்படும் அதிமுக வாா்டு செயலாளா் பழனிசாமி, ரெளடி சூரி (எ) சூரியமூா்த்தி, தண்டி ஜெயக்குமாா், சதீஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறுகையில், மாநகராட்சித் தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் செல்லதுரை போட்டியிடுவதாக இருந்ததாகவும், செல்லதுரை போட்டியிட்டால் தனது வெற்றி பாதிக்கும் என்று கருதிய அதிமுக பிரமுகா் பழனிசாமி, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்தது. அதேபோல ரெளடி சூரி அணியினருக்கும், செல்லதுரையின் நெருங்கிய நண்பா் ஜான், சதீஷ், தண்டி ஜெயக்குமாா் ஆகியோருக்கும், செல்லதுரையிடம் பிரச்னை இருந்து வந்த நிலையில், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனா். இந்த வழக்கில் 15 போ் நீதிமன்றங்களில் சரண் அடைந்துள்ளனா். மேலும் 7 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.