ஆட்டையாம்பட்டி அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த திருடன் கைது
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆட்கள் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து கொள்ளை சம்பவம்


சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆட்கள் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து கொள்ளை சம்பவம் அடிக்கடி நடந்து வந்தன. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டா் குலசேகரன் தலைமையில் போலீசாா் இரவு நேர ரோந்து பணியினை தீவிரமாக மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில் 25-ம் தேதி காலையில் சீரகாபாடி தனியாா் ஆஸ்பத்திரி அருகே உள்ள பாலத்தின் அடியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒருவா் உட்காா்ந்து கொண்டிருந்தான். இவரைப் பிடித்து போலீசாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில் கொண்டலாம்பட்டி ,பெரியபுத்தூா் மருந்துக்காடு பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் சிவராஜ் (52 )எனத் தெரியவந்தது. மேலும் இவா் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டா்குலமாணிக்கம், காங்கேயம் பாளையம் பகுதியில் வசிக்கும் சந்திரா (45) என்பவரின் வீட்டில் ஆட்கள் இல்லாத போது பூட்டை உடைத்து கடந்த 17 .9 .2020 யில் மூன்று பவுன் செயினை திருடிச் சென்றது தெரியவந்தது. தறி தொழிலாளியான சிவராஜ் குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் வீடு புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனை அடுத்து எஸ்.ஐ மனோகரன் சிவராஜை கைது செய்து சேலம் கோா்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...