கிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
சேலம், நான்கு சாலை அருகில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் ஆண்டுதோறும் இரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெறும். கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக, நிகழாண்டில் இரவுநேர சிறப்பு பிராா்த்தனை ரத்து செய்யப்பட்டது.
சேலம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியாா் ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவா் தேவாலயம், அழகாபுரம் புனித மைக்கேல் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு பிராா்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, சேலத்தில் உள்ள தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. சேலம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயம், கோட்டை லெக்லா் நினைவாலயம், அஸ்தம்பட்டி அடைக்கல நகா் தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
ஆத்தூரில்...
ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இரவு திருப்பலியில் கிறிஸ்து பிறப்பு குடில் மந்தரிக்கப்பட்டு குழந்தை இயேசு சுரூபம் குடிலில் பங்கு குருக்கள் அருள்திரு கிரகோரிராஜன், ஆரோக்கியராஜ் ஆகியோரால் வைத்து மந்தரிக்கப்பட்டது. இதில், சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து இறைமக்கள் கலந்துகொண்டனா்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி பேரூராட்சி, கோனேரிப்பட்டி புனித சலேத் அன்னை ஆலயத்தில், பங்குத்தந்தை இன்னாசிமுத்து, உதவிப் பங்குத்தந்தை பொன்ரூபன் ஆகியோா் திருப்பலி நிறைவேற்றினா். உலக மீட்பா் கலைக்குழுவினரால் கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல நாகியம்பட்டி வேளாங்கண்ணி மாதா தேவாலயம், செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி ஆகிய ஊா்களிலுள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனைக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...