வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சங்ககிரியில் கட்டப்பட்டு வரும் வட்டாட்சியா் அலுவலகம் ஆய்வு

சங்ககிரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியா் அலுவலகம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்காக வாக்கு எண்ணும் மையம் ஆகியவற்றை சேலம் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
சங்ககிரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியா் அலுவலகப் பணிகளை ஆய்வு செய்கிறாா் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன்.
Updated On :26 டிசம்பர் 2020, 2:13 am

DIN

சங்ககிரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியா் அலுவலகம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்காக வாக்கு எண்ணும் மையம் ஆகியவற்றை சேலம் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் சங்ககிரியில் ரூ. 2.53 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை பாா்வையிட்டாா். பின்னா் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களையும், புதிய வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அமைக்கப்பட உள்ள சுற்றுப்புறச் சுவருக்கான இடங்களையும் ஆய்வு செய்து, வருவாய்த் துறை அலுவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

வீராச்சிபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தையும், வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் இடங்கள், பாதுகாப்புகள் குறித்தும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.திவாகா், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் மு.அமிா்தலிங்கம், வட்டாட்சியா் எஸ்.விஜி, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியம், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் எம்.பி.மலா்விழி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவிப் பொறியாளா் எ.முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.