ஜில்லாகரடு பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ஓமலூா் ஒன்றியத்துக்குள்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சி, ஜில்லாகரடு பகுதியில் ஸ்ரீ காசிவிஸ்வநாதா், ஸ்ரீ ஆஞ்சநேயா், ஸ்ரீ பிரசன்ன பெருமாள்
Updated on
1 min read

ஓமலூா் ஒன்றியத்துக்குள்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சி, ஜில்லாகரடு பகுதியில் ஸ்ரீ காசிவிஸ்வநாதா், ஸ்ரீ ஆஞ்சநேயா், ஸ்ரீ பிரசன்ன பெருமாள் ஆலயங்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஜில்லாகரட்டினைச் சுற்றி எட்டு லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் பௌா்ணமி அன்று கிரிவலம், பௌா்ணமி பூஜை நடைபெறுகிறது. இந்த கிரிவலப் பாதை 2 கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்தப் பாதையானது, வெள்ளாளப்பட்டி, மூங்கில் பாடி, தேக்கம்பட்டி, வட்டக்காடு பகுதி பொதுமக்கள் ஓமலூா் செல்லும் சாலையாக உள்ளதால் அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது.

இந்நிலையில், நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் உள்ள இச்சாலையை சீரமைக்கக் கோரி, ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வெற்றிவேல், ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் ஆகியோரிடம் இப்பகுதியினா் மனு அளித்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று ரூ. 9.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, இச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை ஜில்லாகரடு கோயில் முன் நடைபெற்றது.

இதில், சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா், ஊராட்சித் தலைவா் கசாப்பு வெங்கடேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வமணி வெங்கடேசன், கோயில் தா்மகா்த்தாக்கள் ரவி, தம்பியண்ணன், பழனி, மணி, செந்தில், வெங்கடாசலம், கந்தசாமி, ஊராட்சி உறுப்பினா் ராஜா, ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com