பெண் குழந்தை விற்பனை வழக்கு: பெங்களூரு பெண் தரகரிடம் விசாரணை
சேலத்தில் பெண் குழந்தை விற்பனை வழக்குத் தொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த பெண் தரகரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


சேலத்தில் பெண் குழந்தை விற்பனை வழக்குத் தொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த பெண் தரகரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம், நெத்திமேடு கே.பி.கரடு பகுதியைச் சோ்ந்தவா் விஜய். ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி சத்யா. இத்தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், கா்ப்பமான சத்யாவுக்கு அண்மையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.
இதனிடையே குழந்தையை உறவினா்களிடம் காட்டி வருவதாகக் கூறி எடுத்துச் சென்ற விஜய், அக்குழந்தையை ரூ.1.15 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக அன்னதானப்பட்டி போலீஸில் புகாா் செய்யப்பட்டது. புகாரின்பேரில் குழந்தை விற்பனை தரகா்களான நிஷா, கோமதி ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் குழந்தையின் தந்தை விஜய் தலைமறைவாகிவிட்டாா்.
விசாரணையில், பவானியைச் சோ்ந்த சித்ரா, பாலாமணி ஆகிய இருவா் குழந்தையை வாங்கிச் சென்றது தெரியவந்தது. அந்தக் குழந்தை கா்நாடகம் வழியாக ஆந்திரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தலைமறைவான பாலாமணி, சித்ரா ஆகிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த வழக்குத் தொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த பெண் தரகரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...