சமூக நல்லிணக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

சமூக, வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

2021-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது, சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு சேலம் மாவட்டத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கான விண்ணப்பத்தை சேலம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்று டிச. 30 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் தமிழகத்தைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளா்கள் நீங்கலாக அவா்களின் சமுதாய நல்லிணக்கச் செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழவேண்டும்.

ஒரு சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இனம், வகுப்பைச் சாா்ந்தவா்களையோஅல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிதல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணைதளத்தினை பாா்வையிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com