

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) கீழ் செயல்பட்டு வரும் இரண்டு சுயஉதவிக் குழுக்களுக்கு, தலா ரூ. 10 லட்சம் என 24 பேருக்கு சிறுதொழில் புரிய மகுடஞ்சாவடி கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் கடன் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜா கலந்துகொண்டு மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கினாா் (படம்).
இவ்விழாவில் ஒன்றியக்குழுத் தலைவா் லலிதா ராஜா, துணைத் தலைவா் சரஸ்வதி நாகராஜ், கூட்டுறவு வங்கித் தலைவா் நாகராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், சுரேஷ் (சத்துணவு ), வட்டார இயக்கம் மேலாளா் விமலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.