பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தம்மம்பட்டியில்  32 பேருந்துகள் இயக்கம்                            

சேலம் மாவட்டத்தின் எல்லையான தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் அனைத்துக் கடைகளும் இன்று திறக்கப்பட்டன.

News image
Updated On :1 ஜூன் 2020, 4:06 am

DIN

சேலம் மாவட்டத்தின் எல்லையான தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் அனைத்துக் கடைகளும் இன்று திறக்கப்பட்டன. சேலம் மண்டலத்திற்குள் பட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயங்கத் தொடங்கின.தம்மம்பட்டி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையைச் சேர்ந்த மொத்தம் 28 அரசுப் பேருந்துகள் சேலம், ஆத்தூர், ராசிபுரம், கெங்கவல்லி மார்க்கங்களில், காலை 6 மணி முதல் இயக்கப்பட்டன. 

தம்மம்பட்டிக்கு ஆத்தூர் டிப்போவிலிருந்து 2 பேருந்துகளும், வாழப்பாடி டிப்போவிலிருந்து ஒரு பேருந்தும், தம்மம்பட்டியைச் சேர்ந்த ஒரு தனியார் பேருந்து ராசிபுரம் வழியாக சேலத்திற்கும் என மொத்தம் மொத்தம் 32 பேருந்துகள் காலையிலிருந்து இயங்கத் தொடங்கின. ஒவ்வொரு பேருந்திலும் குறைந்த பட்சம் 5 பேர் முதல் அதிகபட்சம் 20 பேருக்குள் மட்டுமே பயணிக்கின்றனர்.

இது குறித்து தம்மம்பட்டி மக்கள் கூறியதாவது: பெரும்பாலான மக்களுக்கு பேருந்துகள் இயங்குமா? என்ற சந்தேகம் இருப்பதால், முதல் நாளில் பேருந்துகளில் பயணிகள்  கூட்டம் வெகு குறைவாக காணப்படுகிறது. நாளை முதல் கூடுதலாக வாய்ப்புள்ளது. மேலும் மாவட்ட தம்மம்பட்டியின் கடைசி எல்லைக் கோடு வரை பேருந்துகள் இயக்கினால் வசதியாக இருக்கும்  என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.