ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவிரி பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2020, 9:24 am

DIN

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு  பதிவுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டார். மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஜனவரி 28 ஆம் தேதி 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்தேவை குறையும். மேட்டூர் அணை திறக்கப்பட்ட 86 ஆண்டு வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி 16 ஆண்டுகள் மட்டுமே  பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008 இல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 10 ஆண்டுகள் ஜூன் 12-க்கு முன்பாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 12-க்கு பிறகு 60 ஆண்டுகள் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2019 ஆகஸ்ட் 13 ஆம் தேதி 100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெள்ளிக்கிழமை 305 வது நாளாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. கடந்த 2005-06ஆம் ஆண்டு தொடர்ந்து 427 நாட்கள் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் நடப்பு நீர்பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் வரலாற்றில் 87ஆவது ஆண்டாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையால் உயர்த்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.  முதலில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

அமைச்சர்கள் கே ஏ செங்கோட்டையன் பி தங்கமணி கே சி கருப்பண்ணன் வி சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 11 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நாளான ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு நடப்பு ஆண்டில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2011 இல் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதன் முதலாக  1934 ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.