தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் கூலித்தொழிலாளர்கள் 400 பேருக்கு ரொட்டிகள் வழங்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் 400 கூலித்தொழிலாளர்களுக்கு ரொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:37 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் 400 கூலித்தொழிலாளர்களுக்கு ரொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 

சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர்களுக்கு தொடர்ந்து முககவசம், கையுறை, கிருமிநாசினிகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதனையடுத்து கூலித்தொழிலாளர்களுக்கு ரொட்டி வாங்கி கொடுப்பதென நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். 

சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் திட்டத்தலைவர் சி.கே.ஆர்.ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் 400 கூலித்தொழிலாளர்களுக்கு ரொட்டி (பன்) பாக்கெட்டுகளை வாங்கி சேலம் சேவகன் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கினர்.  ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேஸ்வரகுப்தா, வெங்கடாஜலம், தலைவர் சசிகுமார், செயலர் திவாகர், நிர்வாகி கார்த்திகேயன், தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

சங்ககிரி அக்கமாபேட்டை உதவும் கரங்கள், ஒருக்காமலை கிழக்குப்பகுதி ஆஞ்சநேயர் அன்னதான பக்தர்கள் குழுவின் சார்பில் 25 கிலோ அரிசி சிப்பத்தை அதன் நிர்வாகிகள் எஸ்.எம். மாணிக்கம் தலைமையில் சேவகன் அறக்கட்டளைக்கு வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.