மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேராவூரணி அருகே பெண் காவலரை கத்தியால் தாக்கிய கணவர் கைது

பேராவூரணி அருகே பெண் காவலரை கத்தியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :23 மே 2020, 1:12 pm

DIN

பேராவூரணி அருகே பெண் காவலரை கத்தியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(43). திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபுந்து வருகிறார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையுடன் விவகாரத்து பெற்றவர். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரத்தநாட்டைச்சேர்ந்த செந்தில் குமார்(41) என்பவரை காதலித்து திருமணம் செய்து திருச்சிற்றம்பலத்தில் வசித்து வந்தனர்.

செந்தில் குமார் சட்டப்படிப்பை நிறைவு செய்யாமல் பட்டுக்கோட்டையில் வக்கில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரியை கடுமையாக தாக்கி உடலில் கத்தியால் கீறியதில் காயமடைந்த ராஜேஸ்வரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து ராஜேஸ்வரி புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.