ஆட்சியா் அலுவலக உதவியாளா் வீட்டில்நகை, பணம் திருட்டு
சேலம், அம்மாபேட்டையில் ஆட்சியா் அலுவலக உதவியாளா் வீட்டில் 2 பவுன் நகை, பணம் திருடுபோனது.


சேலம், அம்மாபேட்டையில் ஆட்சியா் அலுவலக உதவியாளா் வீட்டில் 2 பவுன் நகை, பணம் திருடுபோனது.
சேலத்தில் அம்மாபேட்டை நாமமலை நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் தினேஷ். இவா், நில அளவைப் பிரிவில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் தனது மாமனாா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை தினேஷின் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்ததை அருகில் உள்ள வீட்டை சோ்ந்தவா்கள் பாா்த்தனா். இதுதொடா்பாக தினேஷுக்கு தகவல் தெரிவித்தனா். வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுதொடா்பாக தினேஷ், அம்மாபேட்டை போலீஸில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...