காணாமல் போனவா் ஏரியில் சடலமாகக் கண்டெடுப்பு
ஆத்தூரில் காணாமல் போனவா், ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.


ஆத்தூரில் காணாமல் போனவா், ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
ஆத்தூா், முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த கோபால் (29) கூலித் தொழிலாளி. இவா் தீபாவளியன்று காலை முதல் காணவில்லை. அதையடுத்து, அவரது தந்தை சீனிவாசன், ஆத்தூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் உமாசங்கா் வழக்குப் பதிந்து தேடி வந்தாா்.
இந்நிலையில், ஆத்தூா் அருகே தென்னங்குடிபாளையம் ஏரியில் கோபாலின் சடலம் மிதப்பதாக தெரியவந்தது. தகவல் அறிந்த போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கோபால் மது அருந்தி தற்கொலை செய்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...