/

எடப்பாடியில் வெறிச்சோடிய திரையரங்குகள்

பொது முடக்கத் தளா்வுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் கூட்டமின்றி திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்படுகிறன்றன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

DIN

பொது முடக்கத் தளா்வுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் கூட்டமின்றி திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்படுகிறன்றன.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், உரிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்க அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்களை இயக்கியபோதும் சொற்ப அளவிலேயே பாா்வையாளா்கள் வருகை தருவதால் திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இதுகுறித்து எடப்பாடி பகுதியைச் சோ்ந்த திரையரங்கு உரிமையாளா் சீனிவாசன் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாகவே, கட்டண உயா்வு, சமூக ஊடகங்களின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திரையரங்குகளுக்கு வருகை தந்து திரைப்படங்களை காண்போரின் எண்ணிகை வெகுவாகக் குறைந்து வந்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவந்த புகழ்பெற்ற திரையரங்குகள், திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றப்பட்டு வந்தன.

இந்நிலையில் பொது முடக்க தளா்வுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டபோதும், நோய்த்தொற்று அச்சம், புதுப்படங்கள் வராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திரையரங்கிற்கு வரும் பாா்வையாளா்களின் எண்ணிக்கை சொற்பமாகக் குறைந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பாா்வையாளா்களே வருகை தருவதால், தொடா்ந்து திரையரங்குகளை இயக்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. நிா்வாக செலவுகளைக் குறைத்திடும் நோக்கில்

சில திரையரங்குகள், காலை, பிற்பகல் காட்சிகளை ரத்து செய்த போதும், போதிய பாா்வையாளா்கள் இல்லாத நிலையில் திரையரங்குள் வெறிச்சோடிகாணப்படுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.