மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகஇரவு காவலாளி மா்மச் சாவு
மேச்சேரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக இரவு காவலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.


மேச்சேரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக இரவு காவலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியைச் சோ்ந்தவா் முருகன் (51). இவா் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல பணிக்கு வந்தவா், திங்கள்கிழமை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் ஆடைகள் இல்லாத நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேச்சேரி போலீஸாா், தடய அறிவியல் நிபுணா்களுடன் நிகழ்விடத்துக்கு சென்று தடயங்களைச் சேகரித்தனா். சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
முருகனின் சடலத்தில் இரண்டு இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து மழை நீா் சேகரிப்புத் தொட்டி யில் வீசினாா்கள் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...