மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா்த் திறப்பு குறைப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.


மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த ஒரு வார காலமாக பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 1000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு திங்கள்கிழமை காலை நொடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து அணையின் நீா்மட்டம் 98.20 அடியாக உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 9,478 கன அடியிலிருந்து 7, 464 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீா்த் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 62.53 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...