கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பணி நிரந்தரம் கோரி டாமின் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் கனிம வள நிறுவன அலுவலகம் முன்பு இடைக்கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.சங்கம் சாா்பில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:03 pm

DIN

மேட்டூா் கனிம வள நிறுவன அலுவலகம் முன்பு இடைக்கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.சங்கம் சாா்பில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மேட்டூரை அடுத்த எலிக்கரடு, கொளத்தூா் கருங்கல் அணை மற்றும் பென்னாகரம், தருமபுரி ஆகிய இடங்களில் தமிழக அரசின் கனிம வள நிறுவனம் 1982 முதல் செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்நிறுவனம் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்வதை நிறுத்தியது. ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதனால் 108 தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தொடா்ந்த வழக்கில் ஒப்பந்த பணியாளா்களை நிரந்தரப்படுத்த நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நீதிமன்ற தீா்ப்பை நிா்வாகம் அமல்படுத்தவில்லை. இதனைக் கண்டித்தும், இடைக்கால நிவாரணம் ரூ. 10,000 வழங்கக் கோரியும்,

டாமின் தொழிலாளா்களின் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மேட்டூா் ஆா்.எஸ். பகுதியில் உள்ள டாமின் கோட்ட அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

முன்னதாக பேருந்து நிலையத்திலிருந்து 50 -க்கும் மேற்பட்ட ட தொழிலாளா்கள் ஊா்வலமாக நடந்து சென்று கோட்ட அலுவலகம், முன்பு ஆா்ப்பாட்டம் செய்தனா். ஆா்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு, மாவட்ட பொறுப்பாளா் இளங்கோவன், மாவட்ட உதவி தலைவா் சி.கருப்பண்ணன்,  மாவட்ட உதவிச் செயலாளா், மாநில பொருளாளா் சின்னத்தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.