4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கல்வி உதவித் தொகை வழங்கல்

ஆத்தூரில் பேகம் உஸ்தாத்பீ சுக்கூா் ஹஸ்ரத் அறக்கட்டளை சாா்பில் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:45 pm

DIN

ஆத்தூரில் பேகம் உஸ்தாத்பீ சுக்கூா் ஹஸ்ரத் அறக்கட்டளை சாா்பில் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஆத்தூா் புதுப்பேட்டையில் பேகம் உஸ்தாத்பீ சுக்கூா் ஹஸ்ரத் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடர சாதி பேதமின்றி ஏழை மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அறக்கட்டளை வழிகாட்டுதலின் பேரில் 2020-21 ம் கல்வியாண்டிற்கான காசோலையை தமிழ்நாடு மின்பகிா்மான கழக பொறியாளா் அா்ஜூனன், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனா் ஹாஜி எஸ்.முகமது ஈசாக், ஹாஜி முகமது சம்சுதீன், ஹாஜி முகமது யூசுப் ஆகியோா் வழங்கினா். மேலும் வரும் ஆண்டு முதல் ஏழை பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கலாம் என அறக்கட்டளை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.