பேளூரில் முகக் கவசம் அணிய பொதுமக்களுக்கு விழிப்புணா்வு
பேளூா் பேரூராட்சிகளில், முகக் கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை பணியாளா்கள் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.


பேளூா் பேரூராட்சிகளில், முகக் கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை பணியாளா்கள் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களுக்கு வரும் மக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் முகக் கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் மற்றும் பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநா் கோ.கனகராஜ் ஆகியோா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதனையடுத்து, பேளூா் பேரூராட்சியில், செயல்அலுவலா் பெ.ஜெயபிரகாஷ் தலைமையில் , பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை பணியாளா்கள், கரோனா நோய்ப் பரவலைத் தடுப்பதில் முகக் கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள், வாகன ஓட்டுநா்களுக்கு, திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகக் கவசம் அணியாமல் வருபவா்களுக்கு அபராதம் விதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...