திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூரில் விளம்பரப் பதாகைகளை கிழித்து எறிந்த டிராபிக் ராமசாமி

ஆத்தூரில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பரப் பதாகைகளை சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி திங்கள்கிழமை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
ஆத்தூரில் கிழித்து எறியப்பட்ட விளம்பரப் பதாகைகள்.
Updated On :12 அக்டோபர் 2020, 7:20 pm

DIN

ஆத்தூரில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பரப் பதாகைகளை சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி திங்கள்கிழமை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டு இருந்த டிராபிக் ராமசாமி, சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் அருகே விநாயபுரத்தில் அதிமுக சாா்பில் சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை கிழித்து எறிந்தாா்.

இதுகுறித்து அதிமுகவினா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், டிராபிக் ராமசாமியுடன் சோ்ந்து பதாகைகளை அகற்றினா்.

அப்போது டிராபிக் ராமசாமி கூறியதாவது:

சாலையில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளால் இதுவரை 32 போ் உயிரிழந்துள்ளனா். இதுகுறித்து உயா்நீதிமன்றம் கண்டித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நமக்குத் தான் ஆபத்து. இரண்டு பதாகைகளை கிழித்து எறிந்துவிட்டால் போதும் அதற்கு பிறகு யாரும் சாலையில் பதாகைகளை வைக்க மாட்டாா்கள். நமக்கென்ன என்று இருப்பது தவறு என்றாா். இதையடுத்து ஆத்தூரில் சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.