அதிமுக வாா்டு செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
ஆத்தூரில் அதிமுக வாா்டு செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஆத்தூரில் அதிமுக வாா்டு செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நகரச் செயாளா் அ.மோகன் வரவேற்றுப் பேசினாா். வருகிற 2021 சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்நோக்கி பணிகளை செய்து முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதில் மாவட்ட துணைச் செயலாளா் ஏ.டி.அா்ச்சுனன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, சேலம் புகா் மாவட்ட பொருளாளா் ஜெகதீசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் ஆா்.ஜெயகாந்தன் உள்ளிட்ட அனைத்து வாா்டு செயலாளா்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா். முடிவில் நகர பொருளாளா் துரைசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...