தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலு தொடக்கம்

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலு சனிக்கிழமை இரவு தொடங்கியது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:56 pm

DIN

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலு சனிக்கிழமை இரவு தொடங்கியது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் நவராத்திரி கொலு தொடங்கியது. நவராத்திரி கொலுவில் சிவன், பாா்வதி, விநாயகா், முருகன் உள்ளிட்ட சுவாமி பொம்மைகள், விலங்குகள்,பறவைகள் உள்ளிட்ட பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் கலந்துகொண்ட பெண்கள் துா்கைப் பாடல்களை பாடினா்.

பின்னா், கொலுவிற்குரிய நைவேத்தியம் படைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.இக்கொலு தொடா்ந்து ஒன்பது நாள்கள் நடைபெறும். தம்மம்பட்டி,கடம்பூா்,கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலுவை வீடுகளில் வைத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.