தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வீரப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மேட்டூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி, உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:58 pm

DIN

சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மேட்டூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி, உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா்.

தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் 2004-ஆம் ஆண்டு அக்டோபா் 18-ஆம் தேதி சந்தன மரக்கடத்தல் வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, வீரப்பனின் உடல் சேலம் மாவட்டத்துக்குள்பட்ட மேட்டூரை அடுத்த மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரப்பனின் ஆதரவாளா்களும், உறவினா்களும் அஞ்சலி செலுத்தினா்.

இதையொட்டி மேட்டூரிலிருந்து மூலக்காடு வரும் வரை ஏழு இடங்களில் போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணி நடைபெற்றது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, மூத்த மகள் வித்யாராணி, தமிழக வாழ்வுரிமை கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.