தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பழுதடைந்த சாலைகளை செப்பனிடும் ஆட்டோ ஓட்டுநர்: தந்தை சேவைக்கு பள்ளி மாணவரான மகன் உதவி

வாழப்பாடி அருகே சாலையிலுள்ள குண்டு குழிகளுக்கு ஜல்லி, மண் கொட்டி ஆட்டோ ஓட்டுநர் செப்பனிட்டு வருகிறார்.

News image
வாழப்பாடி கடலூர் சாலையில் காணப்பட்ட குழியை மண் கொட்டி செப்பனிடும் ஆட்டோ ஓட்டுனர் ராஜ்குமார், இவரது மகன் சோமு.
Updated On :19 அக்டோபர் 2020, 5:22 am

DIN

வாழப்பாடி அருகே சாலையிலுள்ள குண்டு குழிகளுக்கு ஜல்லி, மண் கொட்டி ஆட்டோ ஓட்டுநர் செப்பனிட்டு வருகிறார். இவருக்கு அரசுப்பள்ளி மாணவனான இவரது மகன் உதவி வருகிறார். தந்தை மகனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(39) ஆட்டோ ஓட்டுநர். கட்டிட தொழிலாளியான இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரது மகன் சோமு (13) துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி மூடிக் கிடப்பதால் வீட்டில் இருந்தே இணைய வழியில் படித்து வருகிறார். வாழப்பாடி பகுதியில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் தேங்கி, பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இந்த குழிககளில் வாகனங்கள் சிக்குவதால் ஓட்டுநர்கள், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். 

இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். இந்த வழித்தடங்களில் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது சாலைகளில் காணப்படும் குழிகளைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார், அரசாங்கம் சாலைகளை செப்பனிடும் வரை காத்திருக்காமல், நம்மால் முடிந்த அளவிற்கு ஜல்லி, மண் கொட்டி குழிகளை மூடி சாலைகளை செப்பனிட முடிவு செய்தார். வாழப்பாடி, துக்கியாம் பாளையம் பேளூர், பெரிய கிருஷ்ணாபுரம் பகுதிகளில், கடலூர் சாலை, பேளூர் சாலை, துக்கியாம் பாளையம் சாலை ஆகியவற்றில் காணப்படுகின்ற குழிகளுக்கு, தனது ஆட்டோவில் ஜல்லி, மண் எடுத்துச் சென்று தனது மகன் சோமு (13) உதவியுடன் குழிகளில் கொட்டி நிரவி குழிகளை மூடி செப்பனிட்டு தற்காலிக தீர்வு ஏற்படுத்தி வருகிறார்.  

கடலூர் சாலையில் பாலா மருத்துவமனை பிரிவு சாலை அருகே காணப்பட்ட ராட்சத குழிக்கு, தந்தையும் மகனும் மண் கொட்டி மூடி ஞாயிற்றுக்கிழமை செப்பனிட்டனர். இந்த காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது. சமூக அக்கறையோடு சாலையில் உள்ள குழிகளை மூடி செப்பனிட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் மற்றும் அரசுப் பள்ளி மாணவரான இவரது மகன் சோமு ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.