மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்புபாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 14,525 கன அடியாக அதிகரித்துள்ளது.


மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 14,525 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 8,160 கன அடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 14,525 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும்,
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 18,000 கன அடியில் இருந்து நொடிக்கு 14,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை 98.46 அடியாக இருந்த மேட்டூா் அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 98.15அடியாக சரிந்தது.
அணையின் நீா் இருப்பு 62.46 டிஎம்சி ஆக இருந்தது. திங்கள்கிழமை பகல் 2 மணி முதல் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் மேட்டூா் அணை நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டு வரும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...