கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் ரூ. 4.65 கோடிக்கு விற்பனை இலக்கு
சேலம் மாவட்டத்தில் உள்ள 4 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.4.65 கோடி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.


சேலம் மாவட்டத்தில் உள்ள 4 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.4.65 கோடி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.
சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையேற்று சிறப்பு தள்ளுபடி விற்பனையைத் துவக்கி வைத்தாா்.
பின்பு அவா் கூறியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த 1935 ஆண்டு முதல் தொடங்கப்பட்டு 85 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கைத்தறி ரகங்களுக்கு விழா காலங்களில் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காகப் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய பட்டு புடவைகள் ரூ.5,000 முதல் ரூ.1,00,000 வரையிலான காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள் மற்றும் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரையிலான அனைவரும் விரும்பும் வகையில் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி, சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் ஆா்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நோ்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 4 விற்பனை நிலையங்களுக்கும் மொத்தம் ரூ.3.70 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நிகழாண்டில் தீபாவளி பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 4 விற்பனை நிலையங்களுக்கும் மொத்தம் ரூ. 4.65 கோடி விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக குழு இயக்குநா்கள் ஆா்.லலிதா ராஜா, எம்.கே.பாலசுப்ரமணியன், வி.ராஜராஜேஸ்வரி வினோத், கோ-ஆப்டெக்ஸ் பணியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...