வேளாண் மசோதாவைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
கொளத்தூா் அருகே மத்திய அரசின் வேளாண் மசோதாவைக் கண்டித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கொளத்தூா் அருகே மத்திய அரசின் வேளாண் மசோதாவைக் கண்டித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் விளைபொருள் வா்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகுக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இம்மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிா்ப்பு கிளம்பிய நிலையில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கொளத்தூா் அருகே கருங்கரட்டில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மசோதாக்களை ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...