பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு

News image
Updated On :19 மார்ச் 2026, 2:44 am IST

ரமலான் பண்டிகையையொட்டி வருகிற மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ரமலான் பண்டிகையையொட்டி வருகிற சனிக்கிழமை (மாா்ச் 21) தேசிய விடுமுறை தினமாகும். ஆகவே, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் செயல்படும் புகா் மின்சார ரயில் டிக்கெட் பதிவு கணினி மையங்கள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மேலும், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.