ஏற்காடு செல்ல திரண்ட இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதியில்லை

ஏற்காடு செல்ல திரண்ட இ-பாஸ் இல்லாத வாகனங்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.
இ-பாஸ் பெறாத சுற்றுலாப் பயணிகளை சேலம், ஏற்காடு அடிவாரத்தில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் போலீஸாா்.
இ-பாஸ் பெறாத சுற்றுலாப் பயணிகளை சேலம், ஏற்காடு அடிவாரத்தில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் போலீஸாா்.

ஏற்காடு செல்ல திரண்ட இ-பாஸ் இல்லாத வாகனங்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

கரோனா பொது முடக்க உத்தரவால் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் கடந்த 5 மாதத்துக்கும் மேலாக செல்லாமல் இருந்தனா். இந்த நிலையில், பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ளதால், வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஏற்காட்டுக்குச் செல்ல காலை முதலே ஏராளமானோா் இருசக்கர வாகனம் மற்றும் காா்களில் வந்த வண்ணம் இருந்தனா்.

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் காவலா்கள் நிறுத்தப்பட்டு இ -பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

ஏற்காட்டுக்குச் செல்ல திரளான வாகனங்கள் வந்ததால் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்காடு போலீஸாா் வாகனப் போக்குவரத்தை சரி செய்தனா்.

ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் திரளான காா்களும் மற்றும் இருசக்கர வாகனங்களும் நின்ால் ஏற்காடு மலை அடிவாரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை நாள்களில் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் கூடுதலாக காவலா்களை நிறுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com