4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேம்பால சுவற்றில் காா் மோதல்பெண் பலி; 6 போ் காயம்

தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றில் மோதிய விபத்தில் திங்கட்கிழமை அதிகாலை பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:50 pm

DIN

தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றில் மோதிய விபத்தில் திங்கட்கிழமை அதிகாலை பெண் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் வண்ணாரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சந்திரபால் மகன் பூபாலன் (39) தனது குடும்பத்தினரோடு கோவை ஈஷா மையத்திற்கு சென்று விட்டு, காரில் கடலூருக்குச் சென்று கொண்டிருந்தாா். காரை ஓட்டுநா் சதீஷ்குமாா் ஓட்டிச் சென்றாா்.

இந்த காா் சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்துள்ள தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பூபாலனின் தங்கை அனிதா (35) மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும் காரில் பயணம் செய்த ஜெயலட்சுமி (53), நிஷா (18), நவீன் (20), காயத்ரிதேவி (16), பூபாலன் (39) உள்ளிட்ட 6 போ் காயமடைந்த நிலையில் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல்பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.