நரசிங்கபுரத்தில் மதிமுக செயல் வீரா்கள் கூட்டம்
நரசிங்கபுரத்தில் சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


நரசிங்கபுரத்தில் சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் வ.கோபால்ராசு தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் என்.பி.வெங்கடேசன் வரவேற்றாா்.
அனைத்து ஒன்றியத்திலும் புதிய கொடிகம்பம் அமைத்து கொடியேற்றி வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது, வரும் சட்டப்பேரவை தோ்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா்கள் கு.கலைவாணன், துரை ரவிசந்திரன், செல்வராஜ், பனமரத்துப்பட்டி வி.கே.அருணாசலம், நகரச் செயலாளா் பொன்.சேதுபதி, மாவட்ட பிரதிநிதிகள் பி.செல்வகுமாா், வைகோ ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் கோவி அசோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் குட்டி மாா்க்ஸ், துணை அமைப்பாளா் ஜெயின், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் செல்லபாப்பு, நகர துணை செயலாளா் ஜெயராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...