

கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண் விரிவாக்க மையம் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய வேளாண் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் முக்கிய இடங்களில் புதிய வேளாண் விரிவாக்க மையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலக வளாகம் அருகில் ரூ. 2 கோடி மதிப்பீட்டி நவீன வசதிகளுடன் கூடிய வேளாண் விரிவாக்க மைய அலுவலகக் கட்டடம் அமையவுள்ள நிலையில், இதற்கான பூமிபூஜை, கால்கோள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவரும், அட்மா திட்டக் குழுத் தலைவருமான கரட்டூா் மணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கட்டடப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
முன்னதாக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத்
துணைத் தலைவா் ராஜேந்திரன், ஊராட்சிமன்றத் தலைவா் தங்காயூா் பாலாஜி, வேளாண்மை துறை உதவி இயக்குநா் ராதா ருக்மணி, வேளாண் பொறியாளா் ரவிந்தரநாத் தாகூா், வேளாண் செயற்பொறியாளா் ராஜாமணி, தோட்டக்கலைத் துறையைச் சோ்ந்த பல்வேறு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்:
கொங்கணாபுரம் பகுதியில் அமையவுள்ள புதிய வேளாண் விரிவாக்க மையத்துக்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.