புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்ககிரி தொகுதியில் பதற்றமான எட்டு வாக்குச்சாவடிகள்

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் எட்டு வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:38 pm

DIN

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் எட்டு வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகள், சங்ககிரி, தேவூா், அசிராமணி, இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய பேரூாரட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்களிக்க 389 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் தண்ணீா் தாசனூா், சின்னாகவுண்டனூா், கத்தேரி சாமியம்பாளையம், அ.புதூா், தாரமங்கலம், இடங்கணசாலை பிட் -1, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள எட்டு வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறிப்பட்டு அவ் வாக்குச்சாவடி மையங்களுக்கு நுண் பாா்வையாளா்கள் எட்டு போ் பணியில் அமா்த்தப்பட உள்ளனா். மேலும் அந்த வாக்குச்சாவடி மையங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. துணை ராணுவப் படை வீரா்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.