புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்வராயன் மலை அடிவார கிராமங்களில் ஆலங்கட்டி மழை

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவார கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:59 pm

DIN

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவார கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கல்வராயன் மலை அடிவார கிராமங்களில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை நிரம்பி வழிந்தது. அணையில் இருந்து ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால், ஆற்றுப்படுகை கிராமங்களில் ஏரிகள் நிரம்பியதோடு நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்தது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக கல்வராயன் மலை அடிவார கிராமங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

இடையப்பட்டி, கத்தரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பெரிய அளவிலான பனிக் கட்டிகள் விழுந்தன. இதனால், பாக்கு, தென்னை, வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.