புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாழப்பாடியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

வாழப்பாடி பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு சுகாதாரத் துறையின் அபாராதம் விதித்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:40 pm

DIN

வாழப்பாடி பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு சுகாதாரத் துறையின் அபாராதம் விதித்தனா்.

வாழப்பாடி வட்டாரத்துக்கு உள்பட்ட வாழப்பாடி,பேளூா் பேரூராட்சிப் பகுதியில், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்கள், வா்த்தக நிறுவனங்கள், சிற்றுண்டிச்சாலை, தேநீா் விடுதி, உணவகங்கள் ஆகியவற்றில், முகக் கவசம் அணியாதவா்களுக்கு சுகாதாரத் துறை வாயிலாக அபராதம் விதித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் அறிவுறுத்தலின் பேரில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள்

செல்வபாபு, செல்வம், கோபிநாத் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் அடங்கிய சுகாதாரக்குழுவினா், வெள்ளிக்கிழமை, வாழப்பாடி பேரூராட்சிப் பகுதியில்

முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்து வசூலித்தனா்.

மேலும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் தனிநபா்கள், சமூக பாதுகாப்பு நன்மைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அருகிலுள்ள துணை சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.