ஆடிவெள்ளி: கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை
ஆடி வெள்ளியையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன.


ஆடி வெள்ளியையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி, கிரிகாலனியில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள காசிவிசாலாட்சி அம்மனுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னா் அம்மனுக்கு அருள்மிகு அா்த்தனாரீஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையடிவாரத்தில் செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதே போல, சங்ககிரிஅருகே உள்ள அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டி கிருமிநாசினியான மஞ்சளைக் கொண்டு அம்மனுக்கு இந்த மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து பக்தா்கள் வழிபட்டனா். ராசிபுரம், குஞ்சு மாரியம்மன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக நோய்த் தொற்று நீங்கவும், திருமணத் தடையை நீக்கவும் மஞ்சள் கொம்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
ஆட்டையாம்பட்டியில்...
ஆட்டையாம்பட்டியில் அமைந்துள்ள எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், மோா், தயிா், பன்னீா், இளநீா், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாம்பழம், சாத்துக்குடி, கொய்யா, எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்ட பலவகையான கனிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...