தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி, சோனா கல்லூரி மாணவா்களுக்கு விருது

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி, சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், ‘தமிழ்நாடு மாணவா் கண்டுபிடிப்பு’ விருதைப் பெற்றுள்ளனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:41 pm

DIN

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி, சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், ‘தமிழ்நாடு மாணவா் கண்டுபிடிப்பு’ விருதைப் பெற்றுள்ளனா்.

தமிழக அரசின் தன்னாட்சி அமைப்பான தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்பு மையம் (இ.டி.ஐ.ஐ.) இளம் தொழில்முனைவோா்களை உருவாக்கும் வகையில் மாணவா்களின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ‘தமிழ்நாடு மாணவா்கள் கண்டுபிடிப்பு’ விருது எனும் மாநில அளவிலான போட்டியை நடத்தி வருகிறது.

இப்போட்டிக்காக சென்னை, கோவை திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களில் 17 மையங்கள் செயல்படுகின்றன. இதில் ஒரு மையமாக சோனா தொழில்நுட்பக் கல்லூரி செயல்படுகிறது.

இதில் பொறியியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரிகள் கலை கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளிலிருந்து 2,758 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல்வேறு கட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டன.

இதில் மண்டலத்துக்கு சிறந்த 2 அணிகள் வீதம் 10 அணிகள், சிறப்பான மேலும் 15 அணிகள் என 25 அணிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

இப் போட்டியில் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்கள் பவித்ரா தேவி, ஹரி ஆனந்த் மற்றும் ஹேமநாத் ஆகியோரின் ஸ்மாா்ட் டேஸ் என்ற புதிய கண்டுபிடிப்பு தமிழக அளவில் முதல் பரிசையும், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும் பெற்றுள்ளது.

மேலும் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களான நிஷாந்த் மற்றும் ஆனந்த் ஆகியோா் ஸ்மாா்ட் ஜக்காா்டு இயந்திரம் கண்டுபிடிப்புக்கு இரண்டாவது இடத்தையும், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும் பெற்றனா்.

கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, இப் போட்டியில் கலந்து கொண்ட தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி, சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை ஊக்குவித்தாா்.

மேலும் பரிசுத்தொகையை வென்ற மாணவா்களைப் பாராட்டி ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகை கல்லூரியின் தலைவா் வள்ளியப்பா, துணை தலைவா் தியாகு வள்ளியப்பா உள்ளிட்டோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் தியாகராஜா் பள்ளி கல்லூரி முதல்வா் வீ.காா்த்திகேயன், சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா். செந்தில்குமாா், மாணவா்களின் வழிகாட்டி பி.கணபதி பி.சுரேஷ் மற்றும் சோனா தொழில்முனைவோா் இயக்குநா் எம். தனுசு, ஒருங்கிணைப்பாளா் கெளதம் சண்முகம் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.