ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொலை! - இஸ்ரேல் அறிவிப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக அறிவிப்பு...

Iran's Intelligence Minister Esmail Ghadi killed in Israeli strike

ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் - AP

Published On :

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகின்றது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், இஸ்ரேலின் புதிய தாக்குதலில் ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்துள்ளார். இருப்பினும், இதுபற்றி ஈரான் அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களில் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் கோலம்ரெசா சுலைமானி செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர்.

மேலும், கடந்த பிப்.28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய திடீர் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The Israeli Defense Ministry has announced that Iran's Intelligence Minister Ismail Khatib has been killed in an Israeli strike.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.