தென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் செல்வதாகத் தகவல்...

Iranian Foreign Minister Abbas Araghchi

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி - கோப்புப் படம்

Published On :

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விரைவில் பாகிஸ்தான் நாட்டுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதையடுத்து, ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிக் குழுக்கள் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டு வருகின்றது. இதற்காக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்குச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வரும் வார இறுதியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் செல்வதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், ஈரானிய அமைச்சர் அராக்ச்சியின் இந்தப் பயணம் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கையாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.

Summary

Reports indicate that Iran's Foreign Minister, Abbas Araghchi, will soon visit Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.