இஸ்ரேலின் தாக்குதலில், ஈரானின் புரட்சிகர காவல் படையின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் விநியோகத்திற்கு முக்கிய வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் கடற்படையினர் முடக்கினர். இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதற்கு முக்கிய காரணமான ஈரானிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை (மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில், நேற்று இரவு இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதி அலிரேசா டங்சிரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு கமேனி, மூத்த ராணுவ அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Alireza Tangsiri, the commander of the Iranian navy was killed in an Israeli strike.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

ஹிஸ்புல்லா படையின் மூத்த தலைவரைக் கொன்ற இஸ்ரேல்!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி பலி!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


