4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் : உதயநிதி

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 10:09 pm IST

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உதயநிதி பதிவிட்டுள்ளதாவது:

''தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கும் என் வாழ்த்துகள்.

இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத் தலைவர் எங்க உயிரான மு.க. ஸ்டாலினுக்கும் கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!

கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியாக இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.

மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமாக நாங்க தான் இனி இருப்போம்.

என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையாக இருப்பேன். கடுமையாக உழைப்பேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

We Will Function as a Strong Opposition: Udhayanidhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.