பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொல்லப்பட்டார்! - உறுதி செய்தார் அதிபர் பெஷேஷ்கியன்!

ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதை அதிபர் பெஷேஷ்கியன் உறுதி செய்தார்...

Iran's Intelligence Minister Esmail Khatib Killed

ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப்.. - AP

Published On :

ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் புதிய தாக்குதலில் ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் கொல்லப்பட்டதை, ஈரானின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:

“எனது அன்புக்குரிய இஸ்மாயில் கதிப், அலி லாரிஜானி மற்றும் அஜீஸ் நசீர்சாதே ஆகியோரும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது எங்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களில் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் கோலம்ரெசா சுலைமானி ஆகியோர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran has confirmed that Iran's Intelligence Minister Esmail Ghadib was killed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.