தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தேசிய தடகளப் போட்டி: பதக்கங்களை வென்றவா்களுக்குப் பாராட்டு

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் சேலத்தைச் சோ்ந்த வீரா்கள், வீராங்கனைகள் இரு தங்கம், இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:40 pm

DIN

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் சேலத்தைச் சோ்ந்த வீரா்கள், வீராங்கனைகள் இரு தங்கம், இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றனா்.

பஞ்சாப் மாநிலம், சங்ரூா் பகுதியில் 19-ஆவது தேசிய பெடரேஷன் கோப்பை ஜூனியா் தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமாா் 2,000 தடகள வீரா்கள் பங்கேற்றனா்.

இப் போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்ற டேவிட் என்ற தடகள வீரா் நீளம் தாண்டுதலில் 7.33 மீட்டா் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றாா். ஆண்களுக்கான போல்வால்ட் போட்டியில் சக்தி மகேந்திரன் 4.50 மீட்டா் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றாா்.

அதேபோட்டியில் கணேஷ் பிரியன் 4.40 மீட்டா் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

பெண்களுக்கான போல்வால்ட் போட்டியில் பாலநிஷா 3.30 மீட்டா் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றாா்.

இப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்று சேலம் திரும்பிய வீரா்கள் அனைவரையும் டூ ஆா் டை அகாதெமியின் தலைவா் சிங்கபுரம் கலியமூா்த்தி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.