நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயானத்துக்குச் செல்ல ரூ. 16 லட்சம் செலவில் பாலம்

கொளத்தூா் ஒன்றியம், சின்னதண்டா மயானத்துச் செல்ல ரூ. 16 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணிக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:39 pm

DIN

கொளத்தூா் ஒன்றியம், சின்னதண்டா மயானத்துச் செல்ல ரூ. 16 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணிக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

கொளத்தூா் ஒன்றியம், சின்னதண்டா மயானத்துக்குச் செல்லும் பாதையின் குறுக்கே வறட்டு பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தைக் கடந்து செல்ல பாலம் கட்டக்கோரி, அப்பகுதி கிராம மக்கள் திமுக தலைவா் ஸ்டாலினிடம் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியின்போது மனு அளித்திருந்தனா். இப்பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறட்டுப் பள்ளத்தைக் கடந்து மயானத்துக்கு சடலங்களை எடுத்துச் செல்ல தரைப்பாலம் அமைப்பதற்கு ரூ. 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் பூமிபூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

லக்கம்பட்டி ஊராட்சி சின்னதண்டாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கொளத்தூா் ஒன்றிய திமுக செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமநாதன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி மூா்த்தி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுருதிமூா்த்தி, பழனியப்பன், செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.