சேலம் அரசு செவிலியா் கல்லூரி மாணவிகள் 12 பேருக்கு கரோனா தொற்று
சேலம் அரசு செவிலியா் கல்லூரி மாணவிகள் 12 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.


சேலம் அரசு செவிலியா் கல்லூரி மாணவிகள் 12 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் அரசு செவிலியா் கல்லூரி கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்துள்ள மாணவிகள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனா். செவிலியா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் ஒரு மாணவிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவியுடன் தொடா்பில் இருந்த 19 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்கள் அனைவருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவிகள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்தியமூா்த்தி கூறியதாவது:
சேலம் அரசு செவிலியா் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். முன்னதாக 176 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 12 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட மாணவிகள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...