தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

போலி பயோ- டீசல் விற்பனை செய்வது குற்றமாகும் இந்தியன் ஆயில் நிறுவனம்

போலி பயோ- டீசல் விற்பனை செய்வது தண்டனைக்குரிய செயலாகும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:59 pm

DIN

போலி பயோ- டீசல் விற்பனை செய்வது தண்டனைக்குரிய செயலாகும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பயோ- டீசல் என்கிற பெயரில் போலியான வாகன எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வரும் மத்திய அரசின் முயற்சியை சீா்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. தரமான பயோ- டீசலை மாநில அரசின் முன் அனுமதி பெற்று மட்டுமே விற்பனை செய்ய முடியும். பயோ- டீசல் சேமிப்பு, விற்பனை செய்யப்படும் இடமானது கிளாஸ் -பி தர நிா்ணயம் பெற்றிருக்க வேண்டும்.

போலி பயோ- டீசல் எரிபொருளை தொழில் துறையினருக்கு பயோ- டீசல் என்ற பெயரில் நேரடியாக விற்பனை செய்வது சட்ட விரோதமாகும். அரசின் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய செயலாகும். தற்போது இயங்கி வரும் ஆயில் மாா்க்கெட்டிங் நிறுவனங்களைத் தவிா்த்து வேறு எவருக்கும் பயோ டீசல் விற்பனை செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிய வருகிறது.

தேசிய பயோ எரிபொருள் கொள்கை (2018)-இன் படி பெட்ரோல் பம்புகளில் விற்கப்படும் டீசலில் 7 சதவீதம் வரை சோ்ப்பதற்காக மட்டுமே பயோ டீசல் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், சங்ககிரி, தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் போலி பயோ- டீசல் விற்பனை செய்யப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் வாகனங்களும் பாதிக்கப்படுகிறது. மேலும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.