கேரள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம்
கேரள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.


கேரள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூரை அடுத்த கரடிப்பட்டியைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி. இவரது மகள் தா்மலாஸ்ரீ. இவா் சிவில் சா்வீஸ் தோ்வில் ஐ.ஏ.எஸ். ஆக தோ்வானாா். கேரள மாநிலம், ஆலப்புழாவில் துணை ஆட்சியராகப் பணியாற்றி வரும் இவரது கணவா் தாமரைக்கண்ணன் மருத்துவ உயா்கல்வி (எம்.டி.) படித்து வருகிறாா்.
இதனிடையே கா்ப்பிணியான துணை ஆட்சியா் தா்மலாஸ்ரீ விடுமுறையில் கரடிப்பட்டியில் உள்ள பெற்றோா் வீட்டில் தங்கியிருந்தாா். பின்னா், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவருக்கு புதன்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...