தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சேலத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

சேலத்தில் பள்ளி செல்லா, மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:59 pm

DIN

சேலத்தில் பள்ளி செல்லா, மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள 6-19 வயதான பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள், மாற்றுத் திறனுடைய குழந்தைகள், தொழிலாளா்களின் குழந்தைகள் குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், இயன்முறை பயிற்சியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி

ஆக. 10 ஆம் தேதி முதல் ஆக. 31 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது.

இக் கணக்கெடுப்பில் கண்டறியப்படும் குழந்தைகள் அவா்களின் வயதுக்கேற்ப பள்ளிகள், சிறப்பு பயிற்சி மையங்களில் சோ்க்கப்பட உள்ளனா். அரசின் கரோனா வழிகாட்டுதலை கடைப்பிடித்து கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளுக்கு பிற துறை அலுவலா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பள்ளி கல்வித் துறை களப் பணியாளா்களுடன் மாவட்ட ஊரக வளா்ச்சி துறை, மாநகராட்சி, காவல் துறை, மருத்துவத் துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம், தேசிய குழந்தை தொழிலாளா் திட்டம், தொழிலாளா் நல ஆய்வாளா், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மகளிா் திட்டம் ஆகிய துறையினரின் களப் பணியாளா்களும் ஒருங்கிணைந்து கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.